அக்டோபர் 11 முதல் சிங்கப்பூர் வானில் அரிய வகை வால் நட்சத்திரம்

1 mins read
1093c567-327a-46c6-a0ed-05ac494a499e
வால் நட்சத்திரங்களுக்கு, வழக்கமாக அவற்றைக் கண்டுபிடித்த நபர் அல்லது வான் ஆய்வுக்கூடத்தின் பெயர் சூட்டப்படும். - கோப்புப் படம்: ஆகா‌ஷ் ஆனந்த்
multi-img1 of 2

நட்சத்திர ஆய்வாளர்களும் விண்கல ஆர்வலர்களும் வரும் வார இறுதியிலிருந்து வானத்தில் அரிய வகை வால் நட்சத்திரத்தைக் காணக்கூடும்.

‘கொமெட் சி/2023 ஏ3’ (Tsuchinshan–Atlas) எனும் அந்த வால் நட்சத்திரம் ஏற்கெனவே கடந்த சில வாரங்களாக சிங்கப்பூர் வானத்தில் தென்பட்டதாக இங்குள்ள விண்கலச் சமூகங்கள் தெரிவித்துள்ளன.

அதனை அக்டோபர் 11 முதல் அக்டோபர் 22 வரை, தீவின் மேற்குப் பகுதியிலிருந்து மேலும் தெளிவாகக் காணலாம் என்று கூறப்படுகிறது.

அக்டோபர் 11ஆம் தேதியன்று, அது ஆக ஒளிமிக்கதாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளதாக அறிவியல் நிலைய ஆய்வுக் கூடமும், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக விண்கல சமூகமும் தெரிவித்தன.

சென்னையில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் காட்சியளிக்கும் ‘கொமெட் சி/2023 ஏ3’ வால் நட்சத்திரம்.
சென்னையில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் காட்சியளிக்கும் ‘கொமெட் சி/2023 ஏ3’ வால் நட்சத்திரம். - படம்: ஆகா‌ஷ் ஆனந்த்

இருப்பினும், வால் நட்சத்திரம் சூரியனுக்கு மிக அருகில் தோன்றும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதனைக் காண சிரமமாக இருக்கும் என்று ஆய்வுக் கூடம் கூறியது.

அந்த வால் நட்சத்திரம் அக்டோபர் 14க்கும் அக்டோபர் 20க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆகத் தெளிவாகக் காட்சியளிக்கக்கூடும் என்றும் சிறப்புக் கருவிகள் ஏதுமின்றி அதனைப் பார்க்கக்கூடிய சாத்தியம் அதிகம் உள்ளது என்றும் அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்