சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 20) காலை அரியவகை சூரிய கிரகணம் ஏற்பட்டது.
காலை 10.54 மணி முதல் பிற்பகல் 12.58 மணிவரை கிரகணம் நீடித்தது. கிரகணத்தின் உச்சம் 11:55 மணியளவில் பதிவானது.
சூரிய கிரகணத்தைக் காண சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் கிட்டத்தட்ட 800 பேர் கூடினர். ஆனால், மழை மேகங்கள் மறைத்ததால் மக்களால் அதனைச் சரியாகப் பார்க்கமுடியவில்லை.
உலகின் பல நாடுகளில் முழு சூரியக் கிரகணமும் மற்ற இடங்களில் பகுதிக் கிரகணமும் இடம்பெற்றது.
ஆஸ்திரேலியாவில் சூரிய கிரகணத்தைப் பொதுமக்கள் யூடியூப் வழியாகப் பார்த்து மகிழ்ந்தனர்.
சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா, பாப்புவா நியூ கினி போன்ற சில நாடுகளில் சூரியனின் ஒருபகுதி மட்டும் மறைந்திருந்தது.
சிங்கப்பூரில் அடுத்த சூரிய கிரகணம் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி ஏற்படும்.