பாசிர் ரிஸ் பூங்காவில் அரியவகை விஷப்பாம்பு

1 mins read
95f6fba5-21b6-4dfe-b11d-2ca730ca67f4
படம்: JIMMY HOON -

பாசிர் ரிஸில் கேளிக்கை மைதானம், கடற்கரைக்கு இடையே உள்ள பூங்காவில் திங்கள் கிழமை அரிய வகை விஷப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.

மரத்திலிருந்து புல் தரையில் கறுப்பு, வெள்ளை பட்டை கொண்ட பாம்பு ஊர்ந்து செல்வதை ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட காணொளியில் காண முடிந்தது.

இதனை சிங்கப்பூரில் உள்ள ஊர்வன, நீர்வாழ் உயிரினங்களை ஆய்வு செய்யும் 'எச்எஸ்எஸ்' என்ற தொண்டூழிய அமைப்பும் உறுதி செய்திருந்தது.

காணொளியைப் பதிவேற்றிய ஜிம்மி ஹுன், சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது பாம்பை அடையாளம் கண்டு பிடித்ததாகக் கூறினார்.

"முதலில் கயிறு என்று நினைத்தேன். ஆனால் அது நகர்ந்ததும் பாம்பு என்பது தெரிந்தது," என்றார் அவர்.

இது பற்றி கருத்து கூறிய தேசிய பூங்காக் கழகத்தின் கிழக்கு வட்டாரப் பூங்காக் களுக்கான குழும இயக்குநர், பாம்பு பற்றி கேள்வியுற்றதாகவும் கழகத்தின் ஊழியர் சென்ற போது அங்கு பாம்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்