உலகில் அடுத்த தொற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பு தயாராக இருக்க வேண்டும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.
“கொவிட்-19 தொற்றுநோய் முதன்முதலில் தாக்கி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் அதன் பாடங்களை மறக்கும் அபாயத்தில் உள்ளது.
“உலகம் சவால்களை ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும்,” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மே 6ஆம் தேதி தெமாசெக் அறக்கட்டளை நடத்திய உயர்மட்ட விருந்து நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் பேசினார்.
அடுத்த பெரிய தொற்றுநோய் எப்போது வரும் என்பதுதான் முக்கியம் என்றும் அது பத்து ஆண்டுகளில் அல்லது அடுத்த ஆண்டே வரக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
“உலகளாவிய சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பில் குறிப்பாக தொற்றுநோய் தடுப்பு மற்றும் தயார்நிலையில் மிக உயர்ந்த மட்டங்களில் முதலீடு செய்வதைத் தொடர வேண்டும், அத்துடன் அனைத்துலக மற்றும் வட்டார ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்,” என்று திரு தர்மன் மேலும் வலியுறுத்தினார்.