அமெரிக்காவில் ரத்த அழுத்த மருந்து திரும்பப் பெறப்பட்ட நடவடிக்கை சிங்கப்பூரைப் பாதிக்காது: எச்எஸ்ஏ

அமெரிக்காவில் ரத்த அழுத்த மருந்து திரும்பப் பெறப்பட்ட நடவடிக்கை சிங்கப்பூரைப் பாதிக்காது: எச்எஸ்ஏ

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

06 Nov 2026 - 11:31 am

1 mins read

அமெரிக்காவில் 3,700க்கும் மேற்பட்ட ரத்த அழுத்த மருந்துப் புட்டிகள் கடைகளிலிருந்து திரும்பப் பெறப்பட்ட அண்மைய நடவடிக்கை, இங்குள்ள பயனீட்டாளர்களைப் பாதிக்காது என்று சுகாதார அறிவியல் ஆணையம் (எச்எஸ்ஏ) தெரிவித்துள்ளது.

உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்தாக ‘டிரைபென்ஸர்’ (Tribenzor) என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் மாத்திரைகளில் குறிப்பிட்ட சிலவற்றைத் திரும்பப் பெறுவதாக ‘மெக்லியாட்ஸ் பார்மசூட்டிகல்ஸ்’ (Macleods Pharmaceuticals) நிறுவனம் அக்டோபர் மாதத் தொடக்கத்தில் அறிவித்தது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்குப் பதிலளித்த சுகாதார அறிவியல் ஆணையம், “மெக்லியாட்ஸ் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் இந்தப் பாதிக்கப்பட்ட தயாரிப்புகள் சிங்கப்பூரில் விற்கப்படுவதில்லை,” என்று தெரிவித்தது.

“எனவே, அமெரிக்காவில் அந்த மருந்துகள் திரும்பப் பெறப்பட்ட நடவடிக்கை, இங்குள்ள அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் விநியோகத் தளங்கள் மூலம் விநியோகிக்கப்படும் மருந்துகளைப் பாதிக்காது,” என்று அது கூறியது.

கரையும் தன்மைக்கான நிர்ணயிக்கப்பட்ட தர அளவீடுகளை எட்டத் தவறியதே மருந்து திரும்பப் பெறப்பட்டதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. அதாவது, மாத்திரைகள் தேவையான அளவில் கரையாததால், அவை எதிர்பார்த்த பலனைத் தராமல் போகலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்