புதிய தனியார் வீட்டு விற்பனை கடந்த செப்டம்பர் மாதம் மீட்சி அடைந்தது.
விற்பனை தொடர்பான அதிகாரபூர்வத் தகவல்களை நகர மறுசீரமைப்பு ஆணையம் 2007ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் புதிய தனியார் வீட்டு விற்பனை சரிந்தது.
அக்டோபர் மாதம் 15ஆம் தேதி வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் எக்செக்யூட்டிவ் கொண்டோமினிய வீடுகளைச் சேர்க்காமல் மொத்தம் 401 புதிய தனியார் வீடுகள் விற்கப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் மாதம் 211 புதிய தனியார் வீடுகள் மட்டுமே விற்கப்பட்டன.
ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டம்பர் மாத விற்பனை 90 விழுக்காடு அதிகம்.
ஆண்டு அடிப்படையில் இது 84.8 விழுக்காடு அதிகம்.
சொத்து சந்தை நிலவரம் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளதாலும் வீடு வாங்குவோரின் நம்பிக்கை கூடியிருப்பதாலும் செப்டம்பர் மாதத்தில் புதிய தனியார் வீடுகளின் விற்பனை அதிகரித்திருப்பதாக எஸ்ஆர்ஐ சொத்து முகவையின் ஆய்வு, தரவுப் பகுப்பாய்வுப் பிரிவின் தலைவர் திரு மோகன் சந்திரசேகரன் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
எக்செக்யூட்டிவ் கொண்டோமினியங்களையும் சேர்த்து புதிய வீடுகளின் விற்பனை 75.3 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளது.

