தேசிய தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வானில் வட்டமடித்து வந்திறங்கிய செஞ்சிங்கங்களுக்கு, பாடாங்கில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
சிங்கப்பூர் ஆகாயப் படையின் சி-130 ரக விமானத்திலிருந்து குதித்த செஞ்சிங்கங்கள், மணிக்கு 120 மைல் வேகத்தில் 500 தள வீவக அடுக்குமாடிக் குடியிருப்பு உயரத்திலிருந்து தரையிறங்கினர் எட்டுச் செஞ்சிங்கங்கள்.
6.16 மணிக்கு முதல் செஞ்சிங்கம் தரையிறங்க, மக்கள் ஆரவாரம் செய்து அவரை வரவேற்றனர். அடுத்தடுத்து வந்திறங்கிய இதர எழுவரையும் உற்சாகம் குன்றாமல், மகிழ்ச்சிப் பேரொலி எழுப்பி மக்கள் வரவேற்றனர்.
முதல்முறையாக, இந்தச் சாசக நிகழ்வில் இரண்டு பெண் செஞ்சிங்கங்கள் பங்கெடுத்தனர்.

