பதின்ம வயது பெண்ணுக்குச் சீர்திருத்தப் பயிற்சி

1 mins read
33e23a70-66c2-4ff1-8db6-13d328e35cb2
ஏமாற்றியதற்காக ஒரு குற்றச்சாட்டையும், மிரட்டிப் பணம் பறித்ததற்காக ஒரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்ட பின்னர் அந்த 18 வயது பெண் சீர்திருத்தப் பயிற்சிக்குச் செல்லவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.  - படம்: பிக்சாபே

சிங்கப்பூரில் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 வயது பெண் ஒருவர் சீர்திருத்தப் பயிற்சிக்குச் செல்லவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்தப் பெண் $950க்குக் கைம்மாற்றாக 34 வயது ஆடவர் ஒருவருடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அதோடு, அவரிடமிருந்து கூடுதல் பணத்தைப் பெறுவதற்கு, அந்தப் பெண் மற்றொரு பதின்ம வயது பெண்ணுடன் இணைந்து செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பதின்ம வயதுப் பெண்ணுக்குச் சென்ற ஆண்டு ஏப்ரலில் 18 வயது பூர்த்தியானது. நீதிமன்ற ஆவணங்களில் ‘ஏஐ’ என்று குறிப்பிடப்பட்ட மற்றொரு பெண்ணுக்கு இப்போது வயது 17.

சென்ற ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அந்த ஆடவர் வயதுகுறைவான அந்தப் பெண்ணிடம் சட்டவிரோதமாக பாலியல் சேவைகளை நாடியதால், அவர் தங்களுக்குப் பணம் செலுத்தாவிட்டால் காவல்துறையில் புகார் செய்யப்போவதாக அந்த இரு பெண்களும் மிரட்டினர்.

அதனால், அந்த ஆடவர் மூத்த பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு $50,000 அனுப்பினார்.

ஏமாற்றியதற்காக ஒரு குற்றச்சாட்டையும், மிரட்டிப் பணம் பறித்ததற்காக ஒரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்ட பின்னர் 18 வயது பெண் சீர்திருத்தப் பயிற்சிக்குச் செல்லவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அந்த ஆடவர் மீதான வழக்கும், மற்றொரு பெண் மீதான வழக்கும் தொடர்கின்றன.

குறிப்புச் சொற்கள்