மரினா அணையின் மரினா பாலத்திலும் அதன் மதகுகளிலும் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதனால், ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பாலம் மூடப்பட்டிருக்கும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் அறிக்கை வழியாகத் தெரிவித்துள்ளது.
இந்த நான்கு நாள்களிலும் தினமும் காலை 9 மணி முதல் இரவு 11.30 மணி வரை பொதுமக்கள் பாலத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும். எனினும், மக்களின் பயன்பாட்டைக் கருத்திற்கொண்டு குறிப்பிட்ட இடைவெளிகளில் பாலம் திறந்துவிடப்படும்.
அந்த இடைவேளைகளில் பராமரிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
பாலம் தற்காலிகமாகத் திறந்துவிடப்படும் நேரங்கள்
* காலை 10.50 - 11 மணி
* நண்பகல் 12 - பிற்பகல் 1 மணி
* பிற்பகல் 3 - 3.10 மணி
* மாலை 5 - 5.10 மணி
* மாலை 6 - 6.20 மணி
* இரவு 7 - 7.10 மணி
* இரவு 8 - 8.10 மணி
* இரவு 9 - 9.10 மணி
* இரவு 10 - 10.10 மணி
* இரவு 11.30 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை
மேற்கூறிய நேரங்களில் பொதுமக்கள் பாலத்தைக் கடக்க அனுமதிக்கப்படுவர்.
கூடுதல் விவரங்களுக்கு மரினா அணையின் தகவல் மையத்தை 6514 5959 எனும் தொலைபேசி எண்ணில் அன்றாடம் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்புகொள்ளலாம்.
அக்டோபர் 31, 2008ல் திறக்கப்பட்ட மரினா அணை, சிங்கப்பூரின் 15வது நீர்த்தேக்கமாகும். இது நீர் ஆதாரம், வெள்ளக் கட்டுப்பாடு, சுற்றுலாத் தலம் என மூவகை நோக்கங்களை நிறைவேற்றுகிறது.


