தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேனன் சிங்கப்பூர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு

1 mins read
02a2934a-8003-4e08-95ac-50e06f80e971
கேனன் சிங்கப்பூர் நிறுவனத்தின் 700 ஊழியர்களில் மிகக் குறைந்த அளவினரே ஆட்குறைப்புச் செய்யப்பட்டதாக அந்நிறுவனம் கூறியது. - படம்: சாவ்பாவ்

ஜப்பானிய தொழில்நுட்ப நிறுவனமான கேனன் அதன் சிங்கப்பூர் அலுவலகத்தில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

இங்குள்ள தனது 700 ஊழியர்களில் “குறைந்த ஒற்றை இலக்க விழுக்காடே” பாதிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தது.

“ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு முன்னதாக, தொழிற்சங்கத்துடன் முன்கூட்டியே கலந்தாலோசித்தோம், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மேலும் உதவ தேசிய தொழிற்சங்க காங்கிரசின் வேலை நியமன, வேலைத்தகுதிக் கழகத்தையும் ஈடுபடுத்தியுள்ளோம்,” என்று அதன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஊழியர்களுக்கு தொழிற்சங்கத்துடனான கூட்டு ஒப்பந்த அடிப்படையில் பணிநீக்கத் தொகுப்பும், அவர்களது மறுதிறன், மேம்பாட்டிற்கு உதவும் வகையில் பயிற்சிப் படித்தொகையும் வழங்கப்படும்.

கேனன் சிங்கப்பூர் அலுவலகம் இந்தியா, தென்கிழக்கு ஆசியாவில் விற்பனை, சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகிறது.

குறிப்புச் சொற்கள்