தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2024ல் ஆட்குறைப்பு குறைந்தது

2 mins read
0a16c935-263f-4981-85d4-b3a1b23756a8
ஒட்டுமொத்த அடிப்படையில், 2024ஆம் ஆண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்டோர் எண்ணிக்கை 12,930ஆகக் குறைந்தது. - படம்: சாவ்பாவ்

ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் அதிகரித்தது.

இருப்பினும், 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024ஆம் ஆண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்டோர் எண்ணிக்கை குறைந்தது.

2024ஆம் ஆண்டில் இறுதிக் காலாண்டில் 3,600 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.

மூன்றாம் காலாண்டில் 3,050 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.

இந்தத் தகவலை மனிதவள அமைச்சு திங்கட்கிழமையன்று (ஜனவரி 27) வெளியிட்டது.

ஒட்டுமொத்த அடிப்படையில், 2024ஆம் ஆண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்டோர் எண்ணிக்கை 12,930ஆகக் குறைந்தது.

2023ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 14,590ஆக இருந்தது.

நிறுவன மறுசீரமைப்பே ஆட்குறைப்புக்குக் காரணம் என்று பரவலாகத் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது, பணியமர்த்தப்பட்ட சிங்கப்பூர்வாசிகளின் (சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள்) எண்ணிக்கையும் 2024ஆம் ஆண்டில் அதிகரித்தது.

2023ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், சிங்கப்பூரில் பணியமர்த்தப்படும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டிலிருந்து மெதுவடையும் என்று அமைச்சு கூறியது.

இதனால் 2024ஆம் ஆண்டில் மொத்த வேலை நியமன வளர்ச்சி 45,500ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டில் மொத்த வேலை நியமன வளர்ச்சி 78,800ஆக அதிகரித்திருந்தது.

அதில் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் சேர்க்கப்படவில்லை.

2024ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சிங்கப்பூரின் மொத்த வேலை நியமனம் தொடர்ந்து வளர்ச்சி கண்டது.

இருப்பினும், சிங்கப்பூர்வாசிகளுக்கான வேலை நியமனம் 8,700ஆகக் குறைந்தது.

மூன்றாவது காலாண்டில் இந்த எண்ணிக்கை 22,300ஆக இருந்தது.

2023ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சிங்கப்பூர்வாசிகளின் வேலை நியமனம் 3,900ஆக வளர்ச்சி கண்டது.

நிபுணத்துவச் சேவை, நிதிச் சேவை, சுகாதாரம் மற்றும் சமூக சேவை போன்ற உயர் திறன் துறைகளில் பணியமர்த்தப்பட்ட சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

சில்லறை வர்த்தகத்துறையில் பணியமர்த்தப்பட்டோரின் எண்ணிக்கை இறுதிக் காலாண்டில் அதிகரித்தது.

கட்டுமானத்துறையில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருப்பதாக அமைச்சு தெரிவித்தது.

தகவல், தொடர்புத்துறை மற்றும் காப்புறுதிச் சேவையில் வெளிநாட்டு ஊழியர்கள் பணியமர்த்தப்படுவது குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, சிங்கப்பூரர்களுக்கான பருவத்துக்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட வேலையின்மை விகிதம் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 2.7 விழுக்காடு அதிகரித்தது.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் வேலையின்மை விகிதத்தில் மாற்றம் இல்லை.

ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் செப்டம்பர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை 1.9 விழுக்காடாக இருந்தது.

சிங்கப்பூரர்களுக்கான ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் செப்டம்பர் மாதத்தில் 2.6 விழுக்காடாகவும் அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை 2.8 விழுக்காடாகவும் இருந்தது.

குறிப்புச் சொற்கள்