2022ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஆட்குறைப்பு இரட்டிப்பு

2022ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஆட்குறைப்பு இரட்டிப்பு

1 mins read
712ca980-51b6-4c4f-8900-420f02f3c1b8
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் மொத்த வேலைவாய்ப்பு நிலவரம் கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு முந்திய சூழலுக்குத் திரும்பியுள்ளது.

ஆனாலும், 2022ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஆட்குறைப்பு இரட்டிப்பானது.

2022 அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 2,990 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். அதற்கு முந்திய காலாண்டில், அதாவது 2022 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் 1,300 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.

மின்னணுக் கருவிகள் தயாரிப்பு மற்றும் தகவல் தொழிநுட்ப துறைகளில் மட்டும் 1,040 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.

ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு நிறுவன மறுசீரமைப்பு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

2022ஆம் ஆண்டில் மொத்தம் 6,440 பேர் ஆட்குறைப்புக்கு ஆளாகினர்.

கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முந்திய 2018, 2019ஆம் ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்