தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உயிர் காக்கும் நிகழ்வாக மாறிய ஒன்றுகூடல் விருந்து

2 mins read
ed0824ad-0a34-4b63-b135-85eaed11584b
ஆர்ச்சர்ட் ரோண்டெவூ ஹோட்டலில் உள்ள துங்லோக் சிங்னேச்சர்ஸ் உணவகத்தில் சம்பவம் நிகழ்ந்தது. - படம்: சாவ்பாவ்

சீனப் புத்தாண்டுச் சடங்கான ஒன்றுகூடல் இரவு விருந்தில் பங்கேற்ற 12 பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று மோசமான ஆஸ்துமா பிரச்சினைக்கு ஆளான சமையல் கலைஞரைக் காப்பாற்றியது.

ஆர்ச்சர்ட் ரோண்டெவூ ஹோட்டலில் (Orchard Rendezvous Hotel) கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) இரவு 10 மணிக்குப் பிறகு அச்சம்பவம் நிகழ்ந்தது. பயிற்சி மாணவரான அலெக்ஸ் (உண்மையான பெயர் அல்ல) துங்லோக் சிக்னேச்சர்ஸ் (TungLok Signatures) உணவகத்தின் கழிப்பறைக்குச் சென்றிருந்தார். கழிப்பறையில் பார்ப்பதற்கு 60 வயதைத் தாண்டியவரைப்போல் தெரிந்த சமையல் கலைஞர் ஒருவர் சுருங்கியபடி உட்கார்ந்திருந்ததை அலெக்ஸ் கண்டார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வி பயிலும் மாணவரான அலெக்ஸ், சமையல் கலைஞரை நேராக உட்கார வைத்து ஆஸ்துமா நோயாளிகளுக்கான சுவாச உதவிக் கருவியை (inhaler) வழங்கி உதவினார். ஆனால், அது பலனளிக்கவில்லை.

அதற்குள் பாதிக்கப்பட்ட சமையல் கலைஞரின் சக ஊழியர்கள் இருவர் அவசர மருத்துவ உதவி வாகனத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் வருவதற்குள் அலெக்சும் அவரின் தந்தை, மற்றோர் உறவினர் இருவரும் சமையல் கலைஞருக்கு அவசர சிகிச்சை வழங்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். தந்தை, உறவினர் இருவரும் மருத்துவர்கள்.

குடிமைத் தற்காப்புப் படையினர் சமையல் கலைஞரைக் கொண்டு சென்றபோது அவர் நினைவுடன் இருந்தாரா என்பது தெரியவில்லை என்று அலெக்ஸ் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சமையல் கலைஞர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் துங்லோக் உணவகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்