தனியார் வீட்டு விலைகளில் ஏற்றம்

தனியார் வீட்டு விலைகளில் ஏற்றம்

1 mins read
03f7bb44-5335-400e-83da-f2a91f6e3624
‘பைனரி ரெசிடென்சஸ்’ மற்றும் ‘ரிவேல் தெம்பனிஸ்’ எக்சகியூட்டிவ் கொண்டோமினியம் வீடுகளின் விறுவிறுப்பான விற்பனையால் விலைகளில் சிறிய ஏற்றம் பதிவானது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒட்டுமொத்தத் தனியார் குடியிருப்பு வீடுகளுக்கான விலைக் குறியீடு இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் 0.9 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளது.

நகர மறுசீரமைப்பு ஆணையம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) இதனைத் தெரிவித்தது.

இம்மாதத் தொடக்கத்தில் ஆணையம் வெளியிட்ட முன்னோடி மதிப்பீடுகளில் அந்த விகிதம் 0.3 விழுக்காடு எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிதாகத் தொடங்கப்பட்ட ‘பைனரி ரெசிடென்சஸ்’ மற்றும் ‘ரிவெல் தெம்பனிஸ்’ எக்சகியூட்டிவ் கொண்டோனிமியம் வீடுகளின் விற்பனை விறுவிறுப்பாக இருக்கும் என்று சொத்துச் சந்தை பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்த்ததால் அவ்வாறு ஆணையம் குறிப்பிட்டிருந்தது.

இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் 2,013 தனியார் குடியிருப்பு வீடுகளின் விற்பனை தொடங்கப்பட்டது. எக்சகியூட்டிவ் வீடுகள் அந்தக் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அதற்கு முந்திய காலாண்டில் அந்த எண்ணிக்கை 2,940ஆக இருந்தது.

மேலும், 2026 முதலாம் காலாண்டில் இன்னும் கட்டி முடிக்கப்படாத தனியார் வீடுகளின் எண்ணிக்கை 1,844 ஆக இருந்தது. அது, அதற்கு முந்திய காலாண்டில் 2,632ஆக இருந்தது.

மறுவிற்பனைப் பரிவர்த்தனைகளும் முதலாம் காலாண்டில் 3,225 எனக் குறைந்தது. அதற்கு முந்திய காலாண்டில் அதன் எண்ணிக்கை 3,529ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்