சாலை விபத்து; ஆடவர் மருத்துவமனையில்

சாலை விபத்து; ஆடவர் மருத்துவமனையில்

1 mins read
e6efd166-b1de-4c4c-a766-e61bee8fdb75
‘எஸ்ஜி ரோட் விஜிலாண்டே’ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட படங்களில், செந்நிறக் கார் ஒன்று தலைகீழாகக் கிடந்ததையும் மஞ்சள் நிறக் கார் ஒன்று மோசமாகச் சேதமுற்றதையும் காண முடிந்தது. - படங்கள்: எஸ்ஜி ரோட் விஜிலாண்டே / ஃபேஸ்புக்

ஃபோர்ட் கேனிங் லிங்க்கை நோக்கிச் செல்லும் ஸ்டாம்ஃபர்ட் சாலையில், மூன்று கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தைத் தொடர்ந்து, ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

அந்த விபத்து அக்டோபர் 27ஆம் தேதி அதிகாலையில் நடந்தது.

விபத்து குறித்து பின்னிரவு 1.30 மணிக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.

‘எஸ்ஜி ரோட் விஜிலாண்டே’ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட படங்களில், செந்நிறக் கார் ஒன்று தலைகீழாகக் கிடந்ததையும் மஞ்சள் நிறக் கார் ஒன்று மோசமாகச் சேதமுற்றதையும் காணமுடிந்தது.

ஃபோர்ட் கேனிங் சுரங்கப்பாதையில் நேர்ந்த விபத்தால், சுரங்கப்பாதை மூடப்பட்டிருப்பதாக பின்னிரவு 2.10 மணிக்கு ‘எக்ஸ்’ தளத்தில் உள்ள நிலப் போக்குவரத்து ஆணையத்தின் போக்குவரத்துச் செய்திகள் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அவர் கார் ஓட்டுநர்களில் ஒருவர் என்று காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். 21 வயது ஆடவர் ஒருவர் விசாரணையில் உதவி வருவதாகவும் அவர்கள் கூறினர்.

சிறு காயங்களுக்காகச் சோதனை செய்யப்பட்ட மேலும் மூவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்தனர்.

குறிப்புச் சொற்கள்