சிங்கப்பூரில் இருசக்கர வாகனத்தில் விபத்துக்குள்ளாகி காயமடைந்து ஒரு சிறுநீரகத்தை இழந்த ஆடவருக்கு 356,000 வெள்ளிக்கு மேல் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.
அஷெர் டேவிட் என்ற 19 வயது பலதுறை தொழில்கல்லூரி மாணவர் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தமது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு கார் வந்து மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் டேவிட்டுக்கு பலத்த காயமும், முதுகெலும்பில் முறிவும், ஈரலில் பாதிப்பும் ஏற்பட்டது. ஒரு சிறுநீரகத்தை அகற்றவேண்டிய நிலை ஏற்பட்டது.
காயத்தில் இருந்து மீண்டிருந்தாலும் டேவிட் உடல் ரீதியாகப் பல பிரச்சினைகளை எதிர்நோக்கினார். அவர் அலுவலகப் பணிகளைச் செய்வதில் சிரமப்பட்டார்.
விபத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டேவிட்டின் நிலைமைக்கு தாம் தான் முழுப்பொறுப்பு என்று கார் ஓட்டுநர் நீதிமன்றத்தில் கூறினார்.


