ஏப்ரல் 17 ஒன் நார்த்தில் சாலைகள் மூடல், பலத்த பாதுகாப்பு

1 mins read
8ebdd694-da7e-44b1-b2d6-673a87a5be2d
‘இன்ஃபினிட் ஸ்டூடியோஸ்’ கட்டடம் உள்ள பகுதியில் சாலைகள் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்படும். - படம்: கூகல் மேப்ஸ்

ஒன் நார்த் வட்டாரத்தில் உள்ள ‘இன்ஃபினிட் ஸ்டூடியோஸ்’ (Infinite Studios) கட்டட வளாகத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 17) காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கிறது.

‘இன்ஃபினிட் ஸ்டூடியோஸ்’, 23 மீடியா சர்க்கல் பகுதியில் அமைந்துள்ளது. வியாழக்கிழமையைன்று அதற்குள் நுழையும் எல்லா வாகனங்கள் மீதும் சோதனை நடத்தப்படும் என்று காவல்துறை புதன்கிழமை (ஏப்ரல் 16) அறிக்கையில் தெரிவித்தது.

உத்தரவுகளுக்கு இணங்கி நடந்துகொள்ளுமாறு காவல்துறை, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வாறு செய்யாதோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை குறிப்பிட்டது.

வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்காக அங்கு போக்குவரத்துக்கும் வாகனங்களை நிறுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும்.

மீடியா வாக், போர்ட்ஸ்டவுன் ரோட் (மீடியா சர்க்குலுக்கும் ‘இன்ஃபினிட் ஸ்டூடியோஸ்’ கட்டடத்துக்கும் இடையிலான பகுதி), ஒன் நார்த் அவென்யூ (போர்ட்ஸ்டவுன் அவென்யூவை நோக்கிய மீடியா சர்க்கல் சந்திப்பிலிருந்து) ஆகிய பகுதிகளைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அவ்வட்டாரத்தின் ஆறு பகுதிகள் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கும்.

சாலைகள் மூடப்பட்டிருக்கும்போது சம்பந்தப்பட்ட பகுதிகளில் அனுமதி பெற்றுள்ள வாகனங்கள், காவல்துறை, அவசரச் சேவை வாகனங்கள் மட்டும்தான் அவற்றில் செல்லமுடியும் எனக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்