மின்னிலக்க நாணயச் சேவை; வளர்ச்சிப் பாதையில் ‘டிரிப்பிள்-ஏ’ நிறுவனம்

மின்னிலக்க நாணயச் சேவை; வளர்ச்சிப் பாதையில் ‘டிரிப்பிள்-ஏ’ நிறுவனம்

படம்: ராய்ட்டர்ஸ்

28 May 2024 - 7:10 pm

1 mins read

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் ‘டிரிப்பிள்-ஏ’ மின்னிலக்க நாணயப் பரிவர்த்தனை நிறுவனம் தற்போது ‘பேபால்’ நிறுவனத்தின் மின்னிலக்க நாணயத்தை அதன் கட்டமைப்பில் சேர்த்துள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் அமெரிக்கா உட்பட பல உலக நாடுகளில் ‘டிரிப்பிள்-ஏ’வின் சேவை விரிவாக்கம் காணும்.

இது குறித்த அறிவிப்பை ‘டிரிப்பிள்-ஏ’ மே 28ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டது.

‘பேபால்’இன் ‘பேபால் யுஎஸ்டி’ நாணயத்திற்கான சேவைகள் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டுக்குள் தங்களது கட்டமைப்பில் இந்த சேவைகளை இரு மடங்காக உயர்ந்த திட்டமிட்டுள்ளதாகவும் ‘டிரிப்பிள்-ஏ’ கூறியது.

‘பேபால் யுஎஸ்டி’ நிலையான மின்னிலக்க நாணயம் ஆகும். அது அமெரிக்க டாலர், யூரோ உள்ளிட்ட நாணயங்களுக்கு நிகரான அன்றைய மதிப்பை கொண்டிருக்கும்.

அமெர்க்காவைச் சேர்ந்த ‘பேபால்’ உலக அளவில் பிரபலமான பண பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனமாகும்.

குறிப்புச் சொற்கள்
மின்னிலக்க நாணயம்அமெரிக்க டாலர்அமெரிக்கா