தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யாகி புயல்: வியட்னாம், லாவோஸ், மியன்மாருக்கு சிங்கப்பூர் ஆயுதப் படைகள் உதவி

1 mins read
d8cc2a58-b060-435a-8a46-b0207e1b4607
யாகி புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிப் பொருள்களை அனுப்பும் சிங்கப்பூர் ஆகாயப் படை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

யாகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள வியட்னாம், லாவோஸ், மியன்மார் ஆகிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவி வழங்க சிங்கப்பூர் ஆயுதப் படைகள் மூன்று விமானங்களை அனுப்பவுள்ளது.

போர்வைகள், நீர் வடிகட்டிகள், உணவுப் பொட்டலங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்படும் என்று சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு புதன்கிழமையன்று (செப்டம்பர் 18) அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தது. சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் உதவிப் பொருள் கையிருப்பிலிருந்தும் அதன் லாபநோக்கமில்லா பங்காளி அமைப்புகளிடமிருந்து பெற்றும் உதவிப் பொருள்கள் வழங்கப்படும்.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், காரிட்டாஸ் சிங்கப்பூர், ஹியூமேனிட்டி மேட்டர்ஸ் (Humanity Matters) உள்ளிட்டவை அத்தகைய லாபநோக்கமில்லா அமைப்புகளில் அடங்கும். சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் சாங்கி வட்டார மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரண ஒருங்கிணைப்பு நிலையத்தின் (Changi RHCC) மூலம் சேகரிக்கப்படும்.

நிவாரணப் பொருள்கள், ஏ330 மல்ட்டி-ரோல் டேங்கர் விமானம் (A330 Multi-Role Tanker), இரண்டு சி-130 ரக விமானங்கள் வாயிலாக உதவிப் பொருள்கள் கொண்டு செல்லப்படும் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. காஸா போரால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிப் பொருள்களை வழங்கவும் அந்த இருவகை விமானங்கள்தான் பயன்படுத்தப்பட்டன.

யாகி புயலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 500ஐத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்