‘பிகேஇ’ பகுதியில் உள்ள செயற்கைக்கோள் தட்டுகள் அகற்றம்

‘பிகேஇ’ பகுதியில் உள்ள செயற்கைக்கோள் தட்டுகள் அகற்றம்

1 mins read
30c23cdc-e40b-46a6-b5c4-bab66ca07cf1
புக்கிட் தீமா விரைவுச்சாலை (பிகேஇ) பகுதியில் இருந்த செயற்கைக்கோள் தட்டுகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புக்கிட் தீமா விரைவுச்சாலை (பிகேஇ) பகுதியில் இருக்கும் இரண்டு செயற்கைக்கோள் தட்டுகள் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகப் பலரின் கவனத்தை ஈர்த்து வந்துள்ளன; ஆனால், இப்போது அவை அகற்றப்பட்டுள்ளன.

ரைஃபிள் ரேஞ்ச் ரோட்டுக்கு அருகே அந்தச் செயற்கைக்கோள் தட்டுகள் அமைந்திருந்தன.

அத்தட்டுகள் இப்போது புக்கிட் தீமா செயற்கைக்கோள் பூலோக நிலையத்தில் (Bukit Timah Satellite Earth Station) இல்லை என்று சிங்டெல் பேச்சாளர் ஒருவர் புதன்கிழமை (ஏப்ரல் 15) தெரிவித்தார். அவற்றை அகற்றும் பணிகள் இவ்வாண்டு முதல் காலாண்டில் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“மாறிவரும் வர்த்தக, வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குத் தோதான உள்கட்டமைப்பை வருங்காலத்தில் அமைப்பதற்காக அவை அகற்றப்பட்டுள்ளன,” என்று அந்தப் பேச்சாளர் சொன்னார்.

1980களில் கட்டப்பட்ட அந்தச் செயற்கைக்கோள் தட்டுகள் அகற்றப்படும்போது பயன்பாட்டில் இல்லை. அதனால், அவை அகற்றப்பட்டபோது எந்தச் சேவையோ வாடிக்கையாளர்களோ பாதிக்கப்படவில்லை.

புக்கிட் தீமா செயற்கைக்கோள் பூலோக நிலையம் 1987ஆம் அண்டு அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. சிங்கப்பூரின் அனைத்துலகத் தொலைத்தொடர்புக் கொள்ளளவை அதிகரிக்க அந்நிலையம் கட்டப்பட்டது.

முதலில் 1971ஆம் ஆண்டு செந்தோசாவாவில் கட்டப்பட்ட நிலையத்தில் கூடுதல் கொள்ளளவுக்கு வசதி இல்லாமல் இருந்தது.

குறிப்புச் சொற்கள்