தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரர்களைக் குறிவைத்த கம்போடிய மோசடிக் கும்பல்; பிடிபடாத ‘தலைவர்’

1 mins read
7f4016e0-c6ef-48a5-83cf-5e1b521acbbb
கம்போடியாவில் நடத்தப்பட்ட முறியடிப்பு நடவடிக்கை. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

கம்போடியாவில் இயங்கிய மோசடிக் கும்பல் ஒன்று சிங்கப்பூரர்களைக் குறிவைத்து மோசடிச் செயல்களில் ஈடுபட்டது.

அந்தக் கும்பலுக்குத் தலைவர் என நம்பப்படுபவர் இன்னும் பிடிபடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக நம்பப்படும் சிங்கப்பூரர்கள் மூவருக்கு வியாழக்கிழமை (அக்டோபர் 2) பிணை மறுக்கப்பட்டது. அந்த மூவர் மீது கடந்த செப்டம்பர் மாதம் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கிறிஸ்டி நியோ வெய் என், 29, இங் வெய் காங், 33, லெஸ்டர் இங் ஜிங் ஹாய், 29, ஆகியோரே அந்த மூவர். தேடப்பட்டுவரும் குற்றக் கும்பல் தலைவராக நம்பப்படுபவரின் பெயர், குடியுரிமை போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அந்தக் குற்றக் கும்பலுடன் தொடர்புடையதாக நம்பப்படும் மோசடிகளில் 40 மில்லியன் வெள்ளிக்கும் மேல் சம்பந்தப்பட்டுள்ளது. குறைந்தது 33 மோசடிச் செயல்களுடன் அந்தத் தொகை சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்போடியத் தலைநகர் நோம் பென்னிலிருந்து அந்தக் கும்பல் செயல்பட்டது. பிணை மறுக்கப்பட்ட மூவரின் வழக்கு இம்மாதம் 23ஆம் தேதி மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வரும்.

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகளைப் போல் நடித்து மேற்கொள்ளப்பட்ட மோசடிகளுக்குப் பின்னால் இருப்பதாக நம்பப்படும் கும்பலை கம்போடிய தேசியக் காவல்துறையுடன் இணைந்து எல்லை தாண்டிய முறியடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு தடுத்ததாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்