தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீயணைப்பில் வீரர் மரணம்: குற்றத்தை ஒப்புக்கொள்ள அதிகாரி சம்மதம்

2 mins read
f45bef78-6c58-44cc-b7ec-23b525e52459
முகம்மது காமில் முகம்மது யாசின், 39. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹெண்டர்சன் ரோடு தீச்சம்பவத்தில் தீயணைப்பாளர் உயிரிழந்த சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி தம் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள இசைந்துள்ளார்.

2022 டிசம்பர் 8ஆம் தேதி ஹெண்டர்சன் ரோட்டில் உள்ள புளோக் 91ல் தீச்சம்பவம் நிகழ்ந்தது. தீயை அணைக்கச் சென்ற சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையில் சார்ஜண்ட் 1 நிலை வீரரான எட்வர்ட் எச். கோ இடம்பெற்று இருந்தார்.

அந்தக் கட்டடத்தின் நாலாவது மாடியில் உள்ள வீட்டில் எரிந்துகொண்டு இருந்த தீயை அணைக்க 19 வயது எட்வர்ட் கோ போராடிக் கொண்டு இருந்த வேளையில் அவருடன் இருந்த முகம்மது காமில் முகம்மது யாசின் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

சம்பவம் குறித்து வேறு எவரிடமும் அவர் தெரிவிக்கவில்லை.

தனியாக விடப்பட்டதால் அந்த 19 வயது அந்த வீரர் மூச்சுத்திணறி இறந்தார். அவர் உயிரிழந்த சம்பவத்தின் தொடர்பில் 2023 அக்டோபரில் காமில் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

மற்றவரின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் மோசமாக செயல்பட்டதால் கடுமையான காயம் ஏற்படக் காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டை, அதிகாரியான காமில், 39, எதிர்நோக்குகிறார்.

தம் மீதான குற்றச்சாட்டை 2025 ஜனவரி 15ஆம் தேதி அவர் ஒப்புக்கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தீயணைப்பு வீரரை தனியாக விட்டுச் சென்றதன் மூலம் நடைமுறை விதிகளுக்கு எதிராக காமில் நடந்துகொண்டதாக 2023 அக்டோபரில் காவல்துறை கூறியது.

காற்றுருளை காலியானதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு டேவிட் கோ உயிரிழந்ததாக பிரேதச் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது.

சாதனங்களின் கோளாறு காரணமாக அந்த வீரர் உயிரிழந்தார் என்பதற்கான ஆதாரம் எதனையும் விசாரணையின்போது கண்டறியவில்லை என்று காவல்துறை கூறியிருந்தது.

தீயணைப்புப் படையில் இடம்பெற்று இருந்த மற்ற வீரர்கள், தீப்பிடித்த வீட்டிலிருந்து டேவிட் கோவை வெளியேற்றி சுவாச மீட்பு முதலுதவியில் ஈடுபட்டனர்.

துணை மருத்துவர்களும் சில முயற்சிகளுக்குப் பின்னர் அவரை சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் மாண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மேற்கொண்ட தீயணைப்புப் பணியின்போது உயிரிழந்த முதல் வீரர் எட்வட்ர் கோ என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்