பாலியல், பாலினம் தொடர்பான கலந்துரையாடலை ரத்து செய்தது அறிவியல் நிலையம்

பாலியல், பாலினம் தொடர்பான கலந்துரையாடலை ரத்து செய்தது அறிவியல் நிலையம்

1 mins read
f5b6ba62-ae9b-481b-9adf-e04e66caf64e
நிகழ்ச்சியை மறுஆய்வு செய்த பிறகு அதனை ரத்து செய்ததாக அறிவியல் நிலையப் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். - படம்: கூகல்

பொதுமக்களின் குறைகூறல்களைத் தொடர்ந்து, பாலியலுக்கும் பாலினத்துக்கும் இடையிலான வேறுபாடுகளைக் கலந்துறையாடும் நிகழ்ச்சி ஒன்றை அறிவியல் நிலையம் ரத்து செய்துள்ளது.

ஜூன் 14ஆம் தேதி நடைபெறவேண்டிய அந்த நிகழ்ச்சி இனி நடைபெறாது என்று நிலையம் கூறியது. இதனால் ஏற்படும் சிரமத்திற்கு அது மன்னிப்பும் கேட்டுக்கொண்டது.

நிகழ்ச்சிக்கான கட்டணம் $20. ‘சினிலெய்சர்’இல் நடைபெறவிருந்த அந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளைப் பெற்றவர்களுக்குப் பணம் திருப்பித் தரப்படும் என்றது அறிவியல் நிலையம்.

18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியும் என்று நிலையம் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தது.

பாலினத்துக்கும் பாலியலுக்கும் உள்ள புரிந்துணர்வை வடிவமைக்கும் உயிரியல், உளவியல், கலாசாரத் தாக்கங்களை ஆராய நிகழ்ச்சி நோக்கம் கொண்டதாகப் பதிவில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்