மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகச் சந்தேகம்; சிங்கப்பூருக்கு தங்கம் வென்ற வீரர் மீது வழக்கு

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகச் சந்தேகம்; சிங்கப்பூருக்கு தங்கம் வென்ற வீரர் மீது வழக்கு

1 mins read
5b132a62-d370-45a7-8f5b-9dd97ae34ce5
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளில் சிங்கப்பூருக்கு சுவர் பந்தில் தங்கம் வென்ற விவ்யன் ரமனன் மீது மதுபோதையில் வாகனம் ஓட்டிய சந்தேகத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கவனம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியதற்காகவும் விவியன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

37 வயது விவியன் மூன்று முறை சிங்கப்பூருக்கு தங்கம் வென்றவர்.

2022ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி காலை 10 மணிவாக்கில் செம்பவாங் ஹில்ஸ் டிரைவ்வில் விவியன் காரை ஓட்டத் தடுமாறியதாகவும் அதனால் விபத்து ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது அவரின் ரத்த பரிசோதனையில் 100 மில்லிலிட்டர் ரத்தத்தில் 82 மில்லிகிராம் மதுபானம் இருந்தது.

100 மில்லிலிட்டர் ரத்தத்தில் 80 மில்லிகிராமுக்கு மேல் மதுபானம் இருக்கக்கூடாது.

வழக்கு விசாரணை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுபவர்களுக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதம் மற்றும் ஓர் ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

மீண்டும் அதே குற்றத்தை செய்தால் 20,000 வெள்ளி வரையிலான அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்

குறிப்புச் சொற்கள்