சீட்ரியம்: $50 மில்லியனுக்கும் அதிகமான சேமிப்புகளை எட்ட இலக்கு

சீட்ரியம்: $50 மில்லியனுக்கும் அதிகமான சேமிப்புகளை எட்ட இலக்கு

1 mins read
edc57810-13c5-43e9-927d-a1a348767fc0
சீட்ரியம் பங்கு விலை, ஆறு காசு அதிகரித்து, திங்கட்கிழமை (பிப்ரவரி 23) காலை 9.06 மணி நிலவரப்படி $2.22ஆகப் பதிவானது. - படம்: சீட்ரியம்

இவ்வாண்டுத் தொடக்கத்திற்குள், அடிப்படையற்ற சொத்துகளை விற்பதன் மூலம், வருடாந்தரச் செயல்பாட்டுச் செலவுச் சேமிப்புகளில் $50 மில்லியனுக்கும் அதிகமாக எட்ட எதிர்பார்ப்பதாக சீட்ரியம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரிலும் இந்தோனீசியாவிலும் கப்பல் பட்டறைகள், இழுவைப் படகுகள், சாதனங்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து அந்தச் சேமிப்புகள் எட்டப்படவிருக்கின்றன.

அண்மைய அறிவிப்புக்குப் பிறகு, சீட்ரியம் நிறுவனத்தின் பங்கு விலை, ஆறு காசு அல்லது 2.8 விழுக்காடு அதிகரித்து, திங்கட்கிழமை (பிப்ரவரி 23) காலை 9.06 மணி நிலவரப்படி $2.22ஆகப் பதிவானது.

தனது செலவுக் கட்டமைப்பை மேலும் சிறப்பாகச் செயல்படுத்த, கூடுதலான அடிப்படையற்ற சொத்துகளை எதிர்கால விற்பனைக்காக சீட்ரியம் ஒதுக்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்