ரெட்ஹில் குடியிருப்பு வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் தீப்பிடித்ததால் 2 சிறுவர்கள் கே கே பெண்கள் மற்றும் சிறார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வீட்டில் இருந்த குளுரூட்டியில் தீப்பிடித்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. அந்த குளுரூட்டி மற்றவரிடம் இருந்து வாங்கப்பட்ட ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 27) 3:40 மணிவாக்கில் தகவல் வந்ததாக அதிகாரிகள் கூறினர்.
அதைத்தொடர்ந்து ஜலான் புக்கிட் மேராவில் உள்ள புளோக் 110-விற்கு அதிகாரிகள் விரைந்தனர்.
எட்டாவது மாடியில் ஏற்பட்ட தீ அதிகாரிகளால் அணைக்கப்பட்டது.
அவ்வீட்டில் 19 மாத குழந்தையும், 8 வயது சிறுவனும் இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.

