ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் பகுதியில் எண்ணெய்த் திட்டுகள் தென்பட்டதை அடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அப்பகுதி தற்காலிகமாக மூடப்படுவதாகத் தேசிய சுற்றுப்புற வாரியம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) தெரிவித்துள்ளது.
பூங்காவின் ‘பகுதி டி’ கடற்கரைப் பிரிவில் எண்ணெய்த் திட்டுகள் காணப்பட்டன.
தற்போது அங்கு எண்ணெய்த் திட்டுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், பொதுமக்கள் கடலில் நீந்தவோ அல்லது நீர் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடவோ வேண்டாம் என்று வாரியம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதியைத் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெறும் வேளையில், பொதுமக்களின் புரிதலையும் பொறுமையையும் எதிர்பார்ப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
