ஆர்ச்சர்ட் ரோட்டில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்

1 mins read
8bbb524d-1d89-4bd0-a88e-f8bdf7d00dc0
புதன்கிழமை (டிசம்பர் 24) மாலை பொதுமக்கள் ஆர்ச்சர்ட் ரோடு செல்ல விரும்புவார்கள் என்பதால் அங்குக் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் (டிசம்பர் 24) ஆர்ச்சர்ட் வட்டாரத்தில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை (டிசம்பர் 24) மாலை பொதுமக்கள் ஆர்ச்சர்ட் ரோடு செல்ல விரும்புவார்கள் என்பதால் அங்குக் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படவுள்ளது. 

மேலும் சில சாலைகள் அன்று மாலை 6 மணிமுதல் பின்னிரவு 2 மணிவரை தற்காலிகமாக மூடப்படும். அதேபோல் சில பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்துச் சேவை இருக்காது. 

“ஆர்ச்சர்ட் ரோட்டில் புதன்கிழமை மாலை காவல்துறை அதிகாரிகள், துணைக் காவல் படையினர், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்,” என்று காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் தடுப்புகள், பாதைகளுக்கான அறிவிப்புப் பலகைகள் போன்றவை ஆர்ச்சர்ட் சாலையில் இருக்கும். இது பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

‘த கிரேட் கிறிஸ்துமஸ் ஈவ் ஸ்திரீட் பார்டி (The Great Christmas Eve Street Party) புதன்கிழமை இரவு 8 மணிக்கு ஆர்ச்சர்ட் ரோட்டில் நடக்கும். அது பின்னிரவு 12.15 மணிவரை நீடிக்கும். 

கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் மக்கள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்