சீஹுவா தொடக்கப்பள்ளியில் இரண்டு மாணவர்களை சக மாணவர்கள் அடித்து துன்புறுத்தியது தொடர்பாக ஐந்து பதின்மவயது ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தத் தகவலை செப்டம்பர் 25ஆம் தேதி காவல்துறை வெளியிட்டது.
சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
இதுபோன்ற செயல்களை காவல்துறை கடுமையாக கண்டிக்கும் என்றும் இவை சட்டத்திற்கு எதிரானவை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குற்றம் செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்காது என்றும் அதிகாரிகள் கூறினர்.
அண்மையில் சீஹுவா தொடக்கப்பள்ளியில் மாணவர் சிலரை சக மாணவர்கள் அடித்து துன்புறுத்துவது தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
மாணவர்கள் அடித்த சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரியும் என்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் சீஹுவா தொடக்கப்பள்ளி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் திங்கட்கிழமை தெரிவித்தது.
மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் எப்போது நடந்தது என்பது பற்றிய முழு விவரங்களை கல்வி அமைச்சும் சீஹுவா பள்ளியும் தெரிவிக்கவில்லை.