‘ஒரிப்பாஸ்’ அட்டைகளை விற்பது குற்றச் செயலாகலாம்: உள்துறை அமைச்சு

‘ஒரிப்பாஸ்’ அட்டைகளை விற்பது குற்றச் செயலாகலாம்: உள்துறை அமைச்சு

1 mins read
54c6a6fa-966b-4b7a-9782-11fc423eee9c
ஒரிப்பாஸ் அட்டைகள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஏமாற்றுச் செயல்கள் அல்லது சட்டவிரோத சூதாட்டத்துடன் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய மர்மப் பெட்டி வர்த்தக அட்டைகளை (trading cards) விற்பது சட்டவிரோதமானதாக இருக்கலாம்.

இதன் தொடர்பில் புகார் கொடுக்கப்பட்டால் காவல்துறை விசாரணை நடத்தும். ஒரிப்பாஸ் என்றழைக்கப்படும் இந்தப் பெட்டிகள் அதிகாரபூர்வ தயாரிப்புகள் அல்ல.

அந்தந்த வழக்கின் தன்மையைப் பொறுத்து ஒரிப்பாஸ்களை விற்பவர்கள் ஏமாற்றுச் செயல்களில் ஈடுபடுபவராகவோ சூதாட்டக் குற்றங்களைப் புரிபவராகவோ வகைப்படுத்தப்படலாம் என்று உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

ஒரிப்பாஸ், மூன்றாம் தரப்பினர் தயாரிப்பவை. அவை லாட்டரி சீட்டுகளைப் போல் விற்கப்படுகின்றன. குறைந்த விலையில் அதிக மதிப்புள்ள கார்டுகளைப் பெறுவதற்கான வாய்ப்பாக இவை விளம்பரப்படுத்தப்படுகின்றன.

வெவ்வேறு மதிப்பைக் கொண்ட வர்த்தக அட்டைகளை விற்பனையாளர்கள், மர்மப் பெட்டிகளில் வைத்து விற்பதுண்டு. அந்த அட்டைகள் அதிக மதிப்புகொண்டவையாக இருக்கும் என்று விற்பனையாளர்கள் விளம்பரப்படுத்துவதுண்டு.

அவற்றை வாங்குவோருக்குக் கிடைக்கும் அட்டைகளின் விலை மதிப்பு பல வேளைகளில் அவர்கள் வாங்குவதற்குச் செலுத்திய தொகையைவிடக் குறைவாக இருக்கும்.

வர்த்தக அட்டை பரிவர்த்தனைகளில் ஒரிப்பாஸ் பெரிய அளவில் இடம்பெறுவது பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்