வெறும் 24 கிலோ எடையுடன் இருந்த மகள்; பட்டினியால் இறந்திருக்கக்கூடும்

செங்காங் மரணங்கள் குறித்த மரண விசாரணை

வெறும் 24 கிலோ எடையுடன் இருந்த மகள்; பட்டினியால் இறந்திருக்கக்கூடும்

2 mins read
758fd062-c4eb-4abf-b339-a9eca3a833fb
திருவாட்டி சு நா, அவரது தந்தை திரு சு பாவ்லு ஆகியோரின் உடல்கள் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ஆம் தேதி செங்காங் ஈஸ்ட் வே, புளாக் 324Dன் எட்டாவது மாடியில் உள்ள வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. - படம்: ஷின்மின்

செங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் திருவாட்டி சு நா கண்டெடுக்கப்பட்டபோது, அவரது உடல் 24 கிலோ எடை மட்டுமே இருந்தது என்றும் அவர் பட்டினியாலும் நீர்ச்சத்துக் குறைபாட்டினாலும் இறந்திருக்கக்கூடும் என்றும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) காவல்துறை தெரிவித்தது.

48 வயது திருவாட்டி சு, மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டது. தனக்கு வழங்கப்படும் உணவில் விஷம் கலந்திருக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, அவர் அடிக்கடி உணவு உண்பதையும் தண்ணீர் குடிப்பதையும் தவிர்த்ததாகக் கூறப்படுகிறது. குமாரி சு நா மற்றும் அவரது தந்தை திரு சு பாவ்லு, 74, ஆகியோரின் மரணங்கள் குறித்த மரண விசாரணையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.

இவர்களது உடல்கள் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ஆம் தேதி செங்காங் ஈஸ்ட் வே, புளோக்க் 324Dன் எட்டாவது மாடியில் உள்ள வீட்டில் கண்டெடுக்கப்பட்டன.

இருவரது மரணமும் இயற்கையான காரணங்களால் நிகழ்ந்தவை என்றும் இதில் எந்தவிதமான சூதும் இல்லை என்றும் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. குமாரி சுவின் உடலில் காயங்களோ அல்லது சித்திரவதை செய்யப்பட்டதற்கான தடயங்களோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

செல்வி சு கடைசியாக ஜூன் 29, 2025 அன்று ஒரு பலசரக்குக் கடையில் பொதுவெளியில் காணப்பட்டார். அப்போது அவர் பேசுவதற்குச் சிரமப்பட்டதாகவும், காவல்துறை அதிகாரிகளிடம் தனது வீட்டு முகவரியைக் கூற முடியாமல் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவரது ஈஸி-லிங்க் அட்டையில் வெறும் $5.77 மட்டுமே இருந்தது.

குமாரி சுவின் தந்தை 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதிக்குப் பிறகு இறந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், வீட்டில் அவரது எலும்புக்கூடு மட்டுமே கண்டெடுக்கப்பட்டதால், அவரது மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை.

திரு சுவின் வங்கிப் பரிவர்த்தனைகளின்படி, அவர் கடைசியாக 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதியன்று $500 ரொக்கத்தை வெளியே எடுத்துள்ளார். அதன் பிறகு, தானியங்கி முறையில் கட்டணங்கள் செலுத்தப்பட்டிருந்தன. அவற்றைத் தவிர வேறு எந்தப் பணப் பரிமாற்றமும் நடைபெறவில்லை.

தனது தந்தை இறந்த பிறகு குமாரி சு சில மாதங்கள் உயிர் பிழைத்திருந்தாலும், அவர் மிகவும் பலவீனமான மனநிலையுடன் சுயமாகச் செயல்பட முடியாத நிலையில் இருந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்