மூத்த அமைச்சர் லீ தீபாவளி வாழ்த்து

1 mins read
78b075da-9168-44d0-a553-f88e8e462035
புதன்கிழமை (அக்டோபர் 30) கேம்பல் லேன் தீபாவளிச் சந்தையில் எடுக்கப்பட்ட படம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மூத்த அமைச்சர் லீ சியன் லூங், தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

வியாழக்கிழமை (அக்டோபர் 31) அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், இருளை ஒளி வெல்வதையும் அறியாமையை மெய்யறிவு வெல்வதையும் தீமையை நன்மை வெல்வதையும் தீபாவளி குறிப்பதாகச் சொன்னார்.

“தீபத் திருநாளைக் கொண்டாட இந்துக் குடும்பங்கள் தங்கள் வீடுகளில் தீப விளக்கேற்றி, ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு, குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்றுகூடி அன்புடன் மகிழ்ந்து, சுவையான உணவு அருந்துகின்றனர்!

“உங்கள் அன்புக்குரியவர்களுடன் நீங்கள் விழாக்களில் மகிழ்ச்சியுறும் அதேவேளையில், அன்பையும் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்!” என்று மூத்த அமைச்சர் லீ தமது பதிவில் வாழ்த்தினார்.

குறிப்புச் சொற்கள்