நாடாளுமுன்ற அமர்வு: சாலை மூடல், பாதுகாப்புச் சோதனைகள்

1 mins read
1162c725-bf1d-4c97-9bf8-1596fb593604
நாடாளுமன்ற வளாகம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் நாடாளுமன்றம் கூடவிருப்பதையொட்டி நாடாளுமன்றக் கட்டடம் இருக்கும் பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) சோதனைகள் நடத்தப்படும்.

நாடாளுமன்ற அமர்வுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அச்சோதனைகள் அடங்கும். காவல்துறை உத்தரவுகளுக்கு இணங்கி நடந்துகொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அவ்வாறு செய்யாதோர்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை வியாழக்கிழமை (செப்டம்பர் 4) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பல சாலைகள் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கும். ஹை ஸ்திரீட், சுப்ரீம் கோர்ட் லேனுக்கும் செயின்ட் ஆண்ட்ரூஸ் ரோட்டுக்கும் இடைப்பட்ட சாலை, பார்லிமென்ட் பிளேசிலிருந்து செயின்ட் ஆண்ட்ரூஸ் ரோட்டுக்கு வழிவிடும் சிறிய சாலை உள்ளிட்டவை வெள்ளி, சனிக்கிழமைகளில் (செப்டம்பர் 5, 6) சில மணிநேரம் மூடப்படும்.

நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள சாலைகளைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். நார்த் பிரிட்ஜ் ரோடு, பார்லிமென்ட் பிளேஸ், ஹை ஸ்திரீட் ஆகிய சாலைகளில் காவல்துறை அதிகாரிகளும் துணைக் காவல்துறை அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்படுவர். வாகன ஓட்டுநர்களை வழிநடத்தும் பணியில் அவர்கள் ஈடுபடுவர்.

வாகனங்களை நிறுத்திவைப்பதன் தொடர்பிலான விதிமுறைகள் அமல்படுத்தப்படும். இடையூறு விளைவிக்கும் வாகனங்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளிலிருந்து அகற்றப்படும்.

ஆகாயப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்