சிராங்கூனில் விபத்து; 56 வயது நடையர் மரணம்

1 mins read
794c096b-3e15-43e8-8cdc-a235d33b4d77
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 19 வயது ஆடவர் டான் டாக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். - படம்: ‌ஷின் மின் வாசகர்

சிராங்கூனில் டிசம்பர் 25ஆம் தேதி பின்னரிவு மோட்டார் சைக்கிளால் ஏற்பட்ட விபத்தில் 56 வயது பெண் நடையர் ஒருவர் மாண்டார். அப்பர் சிராங்கூன் சாலையில் இவ்விபத்து ஏற்பட்டது.

விபத்து தொடர்பாக பின்னிரவு 12.20 மணிக்கு தகவல் வந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய மாது செங்காங் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனைக்கு அனுப்பப்படும் போது அவர் சுயநினைவு இல்லாமல் இருந்தார்.

மருத்துவமனையில் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 19 வயது ஆடவர் டான் டாக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரும் சுயநினைவு இல்லாமல் இருந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்