சுரங்கப் பணிகளை மேற்கொள்வதற்காக வட்ட ரயில் பாதையில் சேவை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அரசாங்க ஊழியரான 44 வயது ரெபேக்கா லி, பாய லேபாரிலிருந்து மவுண்ட்பேட்டன் ரயில் நிலையத்திற்குச் செல்லும் இடைவழிப் பேருந்துச் சேவை எண் 38ல் ஜனவரி 19ஆம் தேதி பயணம் செய்தார்.
வட்ட ரயில் பாதை சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் தனது வழக்கமானப் பயணப் பாதையில் சற்று மாற்றத்தை ஏற்படுத்தினாலும் பெரிய பாதிப்பு எதையும் தான் எதிர்கொள்ளவில்லை எனத் திருவாட்டி லி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
மேலும், ஒரு வாரத்திற்குமுன் இடைவழிப் பேருந்துச் சேவையைத் தான் முயன்றதாகவும் அது தனக்கு வசதியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் மாற்றங்களுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளும் வகையில், ஜனவரி 5ஆம் தேதி முதல் வார நாள்களில் உச்ச வேளையில் இடைவழிப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பாய லேபார், மவுண்ட்பேண்டன், டகோட்டா ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையிலான பயணத்தை இந்த மூன்று மாதச் சேவை மாற்றம் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
ஒரு சிலர் மாற்றத்தைச் சமாளிக்கச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் சற்று குழப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர். செங்காங்கில் வசிக்கும் 45 வயது ஜெஹான் ஆங், தமது தாயாரைச் சந்திக்க டகோட்டாவை நோக்கி சென்றார்.
வட்ட ரயில் பாதையை அடைவதற்காக அவர் முதலில் சிராங்கூன் செல்ல வேண்டியிருந்தது. சிராங்கூனில் ரயில் தள மேடைக்கு அருகில் இருந்த நகரும் படிக்கட்டுகள் இயங்கவில்லை. கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக அது இயக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பின்னர், திரு ஆங் இடைவழிப் பேருந்தைப் பயன்படுத்தி பயா லேபாருக்குச் சென்றார். டகோட்டாவிற்குச் செல்ல மற்றொரு பேருந்திற்காக வரிசையில் காத்திருந்தார்.
ஏற்பாடுகள் சற்று குழப்பமாக இருந்தது எனக் கூறிய அவர், இடைவழிப் பேருந்தைப் பயன்படுத்த பயணிகள் ஊக்குவிக்கப்பட்ட போதிலும் சிலர் முண்டியடித்துக்கொண்டு ரயில்களில் ஏற முயற்சி செய்தனர் எனக் கூறினார்.

