கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய எழுவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
b4a6dda3-7e6e-4abb-a2bc-120887c88ae4
குற்றம் சுமத்தப்பட்டவர்களில் சிலர். (மேல் இடப்புறமிருந்து) டிங் இங் செங், பெர்மாடி அடி, சுபாண்டி ஹாஜி மொஹாரி, ஆகஸ்டின் ஆவ் சின்யிங், ஸ்டெஃபனி பிரிசில்லா சிவன். - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கவனக்குறைவாக வாகனம் ஓட்டி பிறருக்குக் காயம் விளைவித்ததாக ஏழு பேர் மீது புதன்கிழமையன்று (நவம்பர் 19) குற்றம் சுமத்தப்பட்டது.

அந்த விபத்துகளில் மூன்று சைக்கிளோட்டிகள், மூன்று மோட்டார்சைக்கிளோட்டிகள், மோட்டார்சைக்கிளில் பயணம் செய்தவர், நடையர் ஒருவர் என எட்டுப் பேர் காயமடைந்தனர். மரணம், காயம் விளைவிக்கும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மரணம், காயம் விளைவிக்கும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 5,368ஆகப் பதிவானது. இவ்வாண்டு அதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 5,765ஆக அதிகரித்தது.

68 வயது டிங் இங் செங்கிற்கு $4,000 அபராதத்துடன் வாகனம் ஓட்ட ஐந்தாண்டுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி அவர் ஓட்டிய வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பாதிக்கப்பட்ட 51 வயது மோட்டார் சைக்கிளோட்டிக்குக் கால் எலும்பு முறிந்தது.

மற்றொரு வழக்கில் 57 வயது பெர்மாடி அடிக்கு $3,200 அபராதத்துடன் வாகனம் ஓட்டுவதற்கு ஐந்தாண்டுத் தடை விதிக்கப்பட்டது. சாலை விபத்து தொடர்பாக 63 வயது சுபாண்டி ஹாஜி மொஹாரி மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டி காயம் விளைவித்ததாக 43 வயது ஆகஸ்டின் ஆவ் சின்யிங் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 52 வயது டே புவே யோங் ஓட்டிய வாகனம் மோட்டார் சைக்கிளோட்டி மீது மோதியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சைக்கிளோட்டி ஒருவர் மீது வாகனத்தை மோதியதாக 45 வயது ஐலின் லோக் வாய் லெங் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

விபத்து மூலம் இன்னொருவருக்குப் படுகாயம் விளைவித்ததாக 23 வயது ஸ்டெஃபனி பிரிசில்லா சிவன் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.

குறிப்புச் சொற்கள்