ஜூரோங் ஈஸ்ட்டில் ஏழு வாகனங்கள் விபத்து: மூவர் மருத்துவமனையில்

ஜூரோங் ஈஸ்ட்டில் ஏழு வாகனங்கள் விபத்து: மூவர் மருத்துவமனையில்

படம்: ESQUIERDOSAM02/டிக்டாக், ROADS.SG/ஃபேஸ்புக்

27 Oct 2026 - 9:53 am

2 mins read

ஜூரோங் ஈஸ்ட்டில் ஐந்து கார்கள், ஒரு பேருந்து, ஒரு கனரக வாகனம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் மூவர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து திங்கட்கிழமை (அக்டோபர் 26) காலை நிகழ்ந்தது.

காலை 10:30 மணியளவில் பூன் லே வேக்கும் ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரலுக்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பில் நிகழ்ந்த இவ்விபத்து குறித்து தனக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

கார் ஓட்டுநரான 78 வயது ஆடவர், மற்றொரு கார் ஓட்டுநராய 36 வயது பெண்மணி, 76 வயது பெண் பயணி ஆகியோர் சுயநினைவுடன் இருந்த நிலையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரால் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து தொடர்பாக 29 வயது ஆடவர் ஒருவர் தற்போது தீவிர விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

போக்குவரத்து சமிக்ஞை விளக்கு அருகில் சேவை எண் 99 பேருந்து நின்றுகொண்டிருந்தபோது, கார் ஒன்று அதன் வலது புறத்தில் மோதியதாகத் தெரிவித்தார். பேருந்தில் இருந்த எவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படவில்லை என்றும் பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடர மாற்றுப் பேருந்துக்கு மாற்றப்பட்டதாகவும் எஸ்பிஎஸ் டிரான்சிட் கூறியது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், பல தடங்களை வழிமறிக்கும் வகையில் தடுப்புகள் போடப்பட்டிருந்தது பதிவாகியுள்ளது. சம்பவ இடத்தில் ஓர் ஆம்பஉலன்சும் இரண்டு காவல்துறை வாகனங்களும் இருப்பதைக் காண முடிந்தது.

மேலும், மற்றொரு படத்தில் நான்கு கார்களும் ஒரு எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்தும் வெளிப்புறத்தில் பல்வேறு அளவிலான சேதங்களுக்கு உள்ளாகியிருப்பது தெரிகிறது. அதில் ஒரு கறுப்பு நிறக் காரின் முன் பகுதி நொறுங்கி, அதன் போனெட் திறந்த நிலையிலும், அதே சமயம் ஒரு வெள்ளை நிறக் காரின் முன் பகுதி, வலது புறம் மற்றும் பின்பகுதி ஆகிய மூன்று பக்கங்களும் பெரும் சேதமடைந்த நிலையிலும் காணப்பட்டன. மற்றொரு படத்தில், வாகனத்தின் பதிவு எண் பலகை சாலையில் சிதறிக்கிடப்பது பதிவாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
விபத்துமருத்துவமனைகார்பேருந்துஜூரோங் ஈஸ்ட்