தோ பாயோ பகுதியில் உள்ள கோப்பிக் கடையில் தீ

1 mins read
9a0df6c7-d7f5-4a01-8ceb-8b5f60874ef7
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தோ பாயோவின் 260 கிம் கியட் அவென்யூவில் உள்ள கோப்பிக் கடை ஒன்றில் வெள்ளிக்கிழமை இரவு தீச்சம்பவம் ஏற்பட்டது.

சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை. தீச்சம்பவம் ஏற்படும் போது அந்தக் கடையில் யாரும் இல்லை.

கோப்பிக் கடைக்கு எதிரே இருந்த கடையில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

தீச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு இரவு 11:15 மணிக்குத் தகவல் வந்ததாக அதிகாரிகள் கூறினர்.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது மூடப்பட்டிருந்த கடையில் தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

புகையால் மூடப்பட்டிருந்த கடைக்குள் சென்ற பீ‌‌‌ஷான் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

கோப்பிக் கடைக்குள் இருந்த சில உணவு நிலையங்களின் பொருள்கள் தீயில் சேதமடைந்தன.

தீ எதனால் ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்