தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹாங்காங்கில் கடும் புயல்: சிங்கப்பூர் விமானச் சேவைகள் ரத்து

2 mins read
bf4a68dd-7a30-4bd1-8154-0b2af1926746
ஹாங்காங்கிலிருந்து புறப்படவிருந்த பயணிகள் ரத்தான விமானச் சேவைகளால் விமான நிலையங்களில் சிக்கிக்கொண்டனர். - படம்: ஏஎஃப்பி

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திலிருந்து ஹாங்காங் புறப்படவிருந்த பல விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விஃபா சூறாவளியை முன்னிட்டு ஹாங்காங் விடுத்துள்ள ஆகக் கடுமையான எச்சரிக்கையை அடுத்து விமானச் சேவைகள் ரத்தாகின.

கேத்தே பசிபிக், ஸ்கூட், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங் புறப்படவிருந்த விமானச் சேவைகள் ரத்தாகியதை சாங்கி விமான நிலைய இணையத்தளத்தில் காண முடிகிறது.

ஹாங்காங்கிற்கு அருகில் உள்ள மக்காவ், ‌ஷென்சென் ஆகிய நகரங்களுக்கான விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஹாங்காங், ‌ஷென்சென், மக்காவ் ஆகியவற்றுக்குச் சென்று வரும் விமானச் சேவைகள் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக சாங்கி விமான நிலையம் அதன் சமூக ஊடகத் தளங்களிலும் பதிவிட்டது.

ஜூலை 19ஆம் தேதி கேத்தே பசிபிக் வெளியிட்ட அறிக்கையில், ஜூலை 20ஆம் தேதி ஹாங்கிற்குக் காலை 5 மணியிலிருந்து 6 மணி வரை செல்லும் விமானச் சேவைகள் தாமதமாகலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்று தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் புறப்பட தயாராக இருக்கும் அடுத்த விமானத்திற்கு மாற்றிவிடப்படுவார்கள் என்று கேத்தே பசிபிக் குறிப்பிட்டது. கூடுதல் கட்டணத்தையும் நுழைவுச்சீட்டுகளை ரத்து செய்யும் கட்டணங்களையும் தள்ளுபடி செய்வதாகவும் அது சொன்னது.

ஹாங்காங் வானிலை ஆய்வகம் விஃபா சூறாவளிக்கான ஆகக் கடுமையான 10ஆம் நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. அப்படியென்றால் காற்று மணிக்கு 118 கிலோமீட்டர் அல்லது அதற்கும் அதிக வேகத்தில் வீசக்கூடும் என்று சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் சொன்னது.

இதற்குமுன் ஹாங்காங்கைப் பதம் பார்த்த ஆக கடுமையான சூறாவளி 2023ஆம் ஆண்டு வீசிய சோலார் சூறாவளி. அதில் 86 பேர் காயமடைந்தனர். இரண்டு நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

அப்போது 200க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

ஹாங்காங்கில் காற்று மணிக்கு 118 கிலோமீட்டர் அல்லது அதற்கும் அதிக வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாங்காங்கில் காற்று மணிக்கு 118 கிலோமீட்டர் அல்லது அதற்கும் அதிக வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்
குறிப்புச் சொற்கள்