2003ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டுவரை 12 வயது சிறுவனைப் பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆடவருக்கு நான்கு ஆண்டுகள் 9 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு ஜான் சின் சாவ் சிங்கப்பூருக்கு வந்தார். அப்போது அவர் அடிக்கடி தமது தோழி வீட்டுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டார்.
ஜான், தமது தோழியின் மகனை 2003ஆம் ஆண்டு முதல் பாலியல் துன்புறுத்தல் செய்தார். 2009ஆம் தமக்குக் காதலி இருப்பதாகச் சிறுவன் சொன்னதையடுத்து ஜான் அவரைத் துன்புறுத்துவதை நிறுத்தினார்.
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டச் சிறுவனுக்குத் தற்போது 34 வயது.
தமக்கு நேர்ந்த துன்புறுத்தல் குறித்து 2023ஆம் ஆண்டு அந்த 34 வயது ஆடவர் காவல்துறையில் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு தற்போது ஜானுக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜான் மேல்முறையீடு செய்வதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். தற்போது அவர் 30,000 வெள்ளி பிணையில் உள்ளார்.
64 வயதான ஜான் நியூசிலாந்து குடிமகன். அவர் இதற்கு முன்னர் சிங்கப்பூர் குடியுரிமை வைத்திருந்தார்.

