2010க்கும் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் ஒன்பது முதல் 16 வயதுக்குட்பட்ட ஆறு சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஆடவர் ஒருவர், 2019ல் காவல்துறையிடம் சரணடைவதற்கு முன்னதாக, தமக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்து கோரிக்கை விடுத்தார்.
அப்போது, தமக்கு அதிகபட்சப் பிரம்படி தண்டனை விதிக்குமாறு அவர் காவல்துறையிடம் மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
தற்போது 34 வயதாகும் சென் காய்ஜின் என்ற அந்த ஆடவருக்கு 19 ஆண்டுகள், ஒரு மாதம், இரண்டு வாரம், 14 நாள் சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக 24 பிரம்படிகளும் விதித்து புதன்கிழமை (அக்டோபர் 28) நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பாலியல் அத்துமீறல், மானபங்கம், காயப்படுத்துதல் உள்ளிட்ட எட்டுக் குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
2024ல் தமது வங்கிக் கணக்கு விவரங்களை அடையாளம் தெரியாத நபர்களிடம் ஒப்படைத்த குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார். பாலியல் குற்றங்கள் தொடர்பான மேலும் 16 குற்றச்சாட்டுகள் தண்டனையின்போது கருத்தில் கொள்ளப்பட்டன.
சென்னின் வீடு, பொதுக் கழிப்பறைகள், படிக்கட்டுகள், விளையாட்டுப் பூங்கா உள்ளிட்ட பல இடங்களில் இக்குற்றங்கள் நடந்தன. சென்னின் செயல்கள் கவலையளிப்பதாக நீதிபதி மேவிஸ் சியோங் சுட்டிக்காட்டினார்.
