சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட வறுத்த வால்நட் தயாரிப்புகளை மீட்டுக்கொள்ளும்படி சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
ஹாங் சின் டா நிறுவனம் இறக்குமதி செய்த அந்த வால்நட் தயாரிப்புகளில் செயற்கை இனிப்பூட்டியான ‘சைக்லேமேட்’ எனும் வேதிப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு வெள்ளிக்கிழமை (மே 24) தெரிவித்தது.
மேலும், அந்தத் தயாரிப்பில் மற்றொரு செயற்கை இனிப்பூட்டியான ‘அசெசல்ஃபேம்-கே’ எனும் வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி கலக்கப்பட்டிருப்பதாகவும் அமைப்பு கூறியது.
பாதிக்கப்பட்ட 500 கிராம் மற்றும் 1 கிலோ தயாரிப்புகள் முறையே மார்ச் 24, மார்ச் 25 ஆகிய தேதிகளில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட தயாரிப்புகளை மீட்டுக்கொள்ளுமாறு இறக்குமதியாளரை அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
திரும்பபெறும் நடவடிக்கைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

