மலேசியாவிலிருந்து பிரிந்தது தொடர்பான கலைப்பொருள்களைக் காட்சிப்படுத்தும் எஸ்ஜி60 கண்காட்சி

2 mins read
466712a4-e897-451e-abd5-e13800ea19af
1965ஆம் ஆண்டில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூரின் பிரிவு குறித்த செய்தியாளர் சந்திப்பில் அப்போதைய பிரதமர் லீ குவான் யூ மற்றும் துணைப் பிரதமர் டாக்டர் டோ சின் சாய். - படம்: எஸ்பிஎச்

1965 ஆகஸ்ட் 10 அன்று, சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்டு, இனிமேல் ஒரு சுதந்திர நாடாக இருக்கும் என்ற செய்தித்தாள் தலைப்புச் செய்திகளைக் கேட்டு சிங்கப்பூரர்கள் விழித்தெழுந்தனர்.

அப்போதைய பிரதமர் லீ குவான் யூ, கண்ணீர் மல்கச் செய்தியாளர்களைச் சந்தித்த தருணம், மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்தது நாட்டின் ஒரு மிகப் பெரிய வரலாற்று நிகழ்வாகத் திகழ்ந்தது.

பல ஆண்டுகள் கடந்து, சிங்கப்பூரின் பிறப்பு குறித்த ஒரு நுணுக்கமான கண்ணோட்டம் வெளிவந்தது. 1998ஆம் ஆண்டு வெளிவந்த திரு லீ குவான் யூவின் சுயசரிதை குறிப்புகளான ‘தி சிங்கப்பூர் ஸ்டோரி’ மற்றும் முன்னாள் துணைப் பிரதமர் கோ கெங் சுவீயின் 2007ஆம் ஆண்டு வாழ்க்கை வரலாறு போன்றவை அதில் அடங்கும்.

இந்தப் பக்கங்கள் சிங்கப்பூர்த் தலைவர்களின் வாய்மொழி வரலாறுகளையும், பிரிவினை பேச்சுவார்த்தைகளை ஆவணப்படுத்தும் ரகசிய ஆவணங்களையும் நம்பியிருந்தன. அவை இதுவரை வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை.

புதிதாக வகைப்படுத்தப்பட்ட ஆவணங்கள் அதாவது அமைச்சரவை ஆவணங்கள், டாக்டர் கோவால் தொகுக்கப்பட்டு அல்பட்ராஸ் கோப்பு என்று அழைக்கப்படும் கையால் எழுதப்பட்ட குறிப்புகள் போன்றவை டிசம்பர் 8 ஆம் தேதி விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலகக் கட்டடத்தில் தொடங்கும் நிரந்தரக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.

கண்காட்சியைப் பார்வையிட ஆர்வமுள்ளவர்கள் இப்போது தங்கள் டிக்கெட்டுகளை இணையம் வழி முன்பதிவு செய்யலாம். முகவரி: go.gov.sg/albatrosstickets

கண்காட்சிக்கு அனுமதி இலவசம் என்றாலும் முதலில் வருவோருக்கு முதற்சலுகை எனும் அடைப்படையில் நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும்.

தேசிய நூலக வாரியம், தகவல், மின்னலக்க மேம்பாட்டு அமைச்சு இணைந்து உருவாக்கிய இது, எஸ்ஜி60ன் Heart&Soul Experience மற்றும் 2019 Bicentennial Experience ஆகியவற்றை உருவாக்கி உள்ள குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நினைவகமாக, சிங்கப்பூரின் கதைகளை அனைவருடனும் பகிர்ந்துகொள்வதே தேசிய நூலக வாரிய இலக்கின் ஒரு பகுதியாகும் என்று வாரியத்தின் தலைமை நிர்வாகி மெலிசா டாம் கூறினார்.

“அல்பட்ராஸ் கோப்பு மற்றும் பிற வரலாற்று நினைவுச்சின்னங்களைச் சேகரித்து பாதுகாப்பதில் சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகத்தின் கடின உழைப்பின் மூலமும், ஊடகப் பங்காளிகள் உட்பட பல்வேறு பங்குதாரர்களின் நெருங்கிய ஒத்துழைப்புடன், இந்தக் கண்காட்சியை நாட்டுக்கு எஸ்ஜி60 பரிசாக வழங்க முடிந்துள்ளது,” என்று மேலும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்