சிலேத்தார் ஷா திரையரங்கு மூடப்படுகிறது

1 mins read
3ceaa10a-11ea-453a-96a6-0325d81ad7a2
சிலேத்தார் மால் கடைத்தொகுதியில் உள்ள ஷா திரையரங்கு வரும் டிசம்பர் 15ஆம் தேதியுடன் மூடப்படுவதாக ஷா தியேட்டர்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. - கோப்புப்படங்கள்: ஏசியா ஒன்

சிலேத்தார் மால் கடைத்தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கிவரும் ஷா தியேட்டர்ஸ் திரையரங்கம், வரும் டிசம்பர் 15 ஆம் தேதியுடன் மூடப்படும் என்று ஷா தியேட்டர்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அந்தக் கடைத்தொகுதியில் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்ட அந்தத் திரையரங்கம் டிசம்பர் 15ஆம் தேதி வரை செயல்படும் என்று ஷா தியேட்டர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சிலேத்தார் கடைத்தொகுதியுடனான ஒப்பந்தக் காலம் முடிவடைவதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஷா தியேட்டர்ஸ் நிர்வாகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிலெத்தார் மால் கடைத்தொகுதியில் உள்ள ஷா திரையரங்கம் மூடப்படுவதையொட்டி இப்போது முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை படம் பார்க்க நுழைவுச்சீட்டுகள் வாங்குபவர்களுக்கு அங்கு சோளப்பொரியும் மென்பானமும் (பாப்கார்ன் கோம்போ) இலவசமாகக் கொடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்