ஷெங் சியோங் - ஃபுட்பாண்டா கூட்டணி: ஒரு மணி நேரத்துக்குள் மளிகைப் பொருள்கள் விநியோகச் சேவை

ஷெங் சியோங் - ஃபுட்பாண்டா கூட்டணி: ஒரு மணி நேரத்துக்குள் மளிகைப் பொருள்கள் விநியோகச் சேவை

1 mins read
8a9439aa-b8a3-4260-b2cd-a9c88d0ce307
விரைவு மளிகைப் பொருள்கள் விநியோகச் சேவையை முதற்கட்டமாக 43 ஷெங் சியோங் கிளைகளில் கிடைக்கும். - படம்: ஃபுட்பாண்டா”

மளிகைப்பொருள்களையும் அத்தியாவசியப் பொருள்களையும் வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்து விரைவாகப் பெற விரும்பும் குடும்பங்களுக்கான நற்செய்தி.

பேரங்காடி நிறுவனமான ஷெங் சியோங்கும் உணவு விநியோக நிறுவனமான ஃபுட்பாண்டாவும் இணைந்து ஜூன் 22ஆம் தேதி முதல் ஒரு புதிய கூட்டுச் சேவையைத் தொடங்கவுள்ளன.

இதன்மூலம் 12,000க்கும் மேற்பட்ட மளிகைப் பொருள்களைப் பயனர்கள் முன்பதிவு செய்த ஒரு மணி நேரத்திற்குள் பெறமுடியும்.

இந்த விரைவு மளிகைப்பொருள்கள் விநியோகச் சேவை முதற்கட்டமாக 43 ஷெங் சியோங் கிளைகளில் கிடைக்கப்பெறும் என்றும் வரும் நாள்களில் இச்சேவையை மற்ற கிளைகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் இரு நிறுவனங்களும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

“வாடிக்கையாளர்களின் முன்பதிவு பொருள்கள் ஒரு மணி நேரத்திற்குள்ளாக விநியோகிக்கப்படும். இதன்வழி ஷெங் சியோங் நிறுவனத்தின் சிறப்புச் சலுகைகளும் சிக்கனச் சேமிப்புகளும் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்கே நேரடியாகக் கொண்டுவந்து சேர்க்கப்படும்,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டுமுதல், சிங்கப்பூரில் ஃபுட்பாண்டா செயலி மூலம் மளிகைப் பொருள்களை முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை ஏழு விழுக்காடும் ஒவ்வொரு பதிவிலும் வாங்கப்படும் பொருள்களின் சராசரி அளவு எட்டு விழுக்காடும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புச் சலுகைகள்

இந்தப் புதிய சேவையின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், வரும் ஜூலை 19ஆம் தேதிவரை சில குறிப்பிட்ட ஷெங் சியோங் தயாரிப்புகளுக்கு 40 விழுக்காடு வரை தள்ளுபடியும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கும் சிறப்பு விளம்பரத்தை இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்