சிங்கப்பூர் நீரிணையில் கப்பலும் படகும் மோதின

சிங்கப்பூர் நீரிணையில் கப்பலும் படகும் மோதின

கடல்துறை, துறைமுக ஆணையம் விசாரணை
படம்: ரெட்டிட்

22 Sep 2026 - 8:25 pm

1 mins read

சிங்கப்பூரின் கடற்பகுதியில் சீனாவில் பதிவுசெய்யப்பட்ட மீன்பிடி படகும் பனாமா கொடியேந்திய பெரிய கப்பலும் மோதிக்கொண்ட விபத்துகுறித்து சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளது.

லு சிங் யுவென் யூ 108 மீன்பிடிப் படகும் ஃபர்ஸ்ட் மார்கோ கப்பலும் இம்மாதம் 17ஆம் தேதி சிங்கப்பூர் நீரிணையில் மோதிக்கொண்டதாக ஆணையம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) கூறியது.

விபத்து தொடர்பில் சிப்பந்திகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் விபத்துக் காரணமாக தூய்மைகேடு பிரச்சினை எழவில்லை என்றும் ஆணையம் சொன்னது. கப்பல் போக்குவரத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அது உறுதிப்படுத்தியது.

இந்தச் சம்பவத்தின்போது சீன மீன்பிடிப் படகுக்குள் நீர் புகுந்தபோதும், அது மூழ்காமல் மிதந்தபடியும் சீராகவும் இருந்ததாக ஆணையம் குறிப்பிட்டது.

கப்பல் எந்தளவு பாதிக்கப்பட்டிருந்தது என்பதை மதிப்பிட ராஃபிள்ஸ் நங்கூரமிடும் பகுதிக்கு அது இழுத்துச் செல்லப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிப்பந்திகள் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை உதவியது.

பனாமா கொடியேந்திய சரக்குக் கப்பல் சிங்கப்பூரின் கிழக்கே உள்ள நங்கூரமிடும் பகுதியிலிருந்து மாலை 4 மணியளவில் மேற்கு நோக்கிப் புறப்பட்டதாக ‘தி மரிடைம் எக்ஸிகியூட்டிவ்’ செய்தி வெளியிட்டது.

படகும் கப்பலும் மோதிக்கொண்டதில் படகுக்குள் நீர் புகுந்தது.
படகும் கப்பலும் மோதிக்கொண்டதில் படகுக்குள் நீர் புகுந்தது. - படம்: ரெட்டிட்
குறிப்புச் சொற்கள்
கப்பல்மோதல்கடல்துறைதுறைமுகம்ஆணையம்விசாரணைவிசாரணை