ஷாப்பி நிறுவனம் தேசியக் கொடிகளை இலவசமாகப் பெறுவதற்கான வாய்ப்பை இம்மாதம் 29ஆம் தேதி நள்ளிரவுக்கு முன் 11.59 வரை அல்லது இருப்பு இருக்கும் வரை நீட்டித்துள்ளது.
ஷாப்பி ஏறக்குறைய 100,000 தேசியக் கொடிகளை இதுவரை விநியோகம் செய்துள்ளது.
மக்களின் வலுவான ஆர்வத்தால் அதைப் பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டித்ததாக ஷாப்பி நிறுவனம் ஜூலை 21ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சொன்னது.
தேசிய தின அணிவகுப்பின் ஏற்பாட்டுக் குழுவுடன் இணைந்து தொடங்கப்பட்ட ‘ஃபிளை அவர் ஃபிளேக்’ (Fly Our Flag) திட்டம் இம்மாதம் 15ஆம் தேதி நள்ளிரவு வரை அல்லது இருப்பு இருக்கும் வரை தொடரும் என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு ஜூன் 27ஆம் தேதி சொன்னது.
தேசியக் கொடிகளைப் பெற https://shopee.sg/ndp-2025-flyourflag இணையத்தளத்தில் சிங்பாஸ் மூலம் சென்று சிறிய கட்டணம் செலுத்தி வீட்டிற்கே விநியோகம் செய்யும்படி விண்ணப்பிக்கலாம் அல்லது 3,000க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30ஆம் தேதி வரை தேசியக் கொடிகளைப் பறக்கவிடும்படி சிங்கப்பூரர்களை அமைச்சு உற்சாகப்படுத்தியது.
தேசியக் கொடிகளை மரியாதையுடன் பார்த்துகொள்ள வேண்டும் என்ற அமைச்சு, தேய்ந்த, கிழிந்த கொடிகளைப் பறக்கவிட வேண்டாம் என்று அறிவுறுத்தியது.
ஷாப்பி நிறுவனத்தின் அணியும் முதல்முறையாகத் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கிறது. சிங்கப்பூரில் ஷாப்பி கால்பதித்து 10 ஆண்டு நிறைவடைகிறது.