அடுத்த இரு வாரங்களுக்கு முற்பகல் பின்னேரத்திலும் பிற்பகலிலும் சிங்கப்பூரின் பல பகுதிகளில் இடியுடன் சிறுமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில நாள்களில் கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் முன்னுரைத்துள்ளது.
ஓரிரு நாள்களுக்குக் காலை வேளையில், பெருங்காற்றுடன் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்று செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 18) வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
அன்றாட அதிகபட்ச வெப்பநிலை 33 - 34 டிகிரி செல்சியசாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில நாள்களில் 34 டிகிரி செல்சியசைவிட சற்று அதிகமாகவும் இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சில நாள்களின் இரவிலும் வெப்பநிலை 28 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக இருக்கலாம். குறிப்பாக, தெற்கு, கிழக்குக் கடலோரப் பகுதிகளில் இரவுப் பொழுதில் புழுக்கமாக இருக்கலாம்.

