தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈரானிய வான்வெளியைத் தவிர்க்கும் எஸ்ஐஏ, ஸ்கூட்

1 mins read
9d356a2f-1b01-45e9-8357-a2d22a26872f
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள். - கோப்புப்படம்: சாவ்பாவ்

சிங்கப்பூர் ஏர்லைன்சும் (எஸ்ஐஏ) அதற்குச் சொந்தமான மலிவு விலை விமானச் சேவையான ஸ்கூட்டும் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஈரானிய வான்வெளி வழியாகப் பயணம் மேற்கொள்வதில்லை.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தாங்கள் அந்நடவடிக்கையை எடுப்பதாக எஸ்ஐஏ தெரிவித்தது. 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதியிலிருந்தே எல்லா எஸ்ஐஏ, ஸ்கூட் விமானங்களும் மாற்று பயணப் பாதைகளைப் பயன்படுத்துவதாக எஸ்ஐஏ பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

தங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியக்ளின் பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

“மத்திய கிழக்கில் நிலவரத்தை தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கத், தேவைப்படும்போது விமானப் பயணப் பாதையை மாற்றுவோம்,” என்று எஸ்ஐஏ பேச்சாளர் தெரிவித்தார்.

இஸ்ரேல் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) ஈரானில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியது. அதனால் வட்டார அளவில் பதற்றம் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

அணுவாயுத நிலையங்கள், ஏவுகணை ஆலைகள், ராணுவ தளபதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தாக்குதல், டெஹ்ரான் அணுவாயுதங்களை உருவாக்காமல் இருப்பதைத் தடுக்கும் நீண்டகால நடவடிக்கை என்று இஸ்ரேல் சொன்னது.

குறிப்புச் சொற்கள்