அரை நிதியாண்டில் சாதனை அளவாக $11.3 பில்லியன் ஈட்டிய ‘எஸ்ஐஏ’ குழுமம்

அரை நிதியாண்டில் சாதனை அளவாக $11.3 பில்லியன் ஈட்டிய ‘எஸ்ஐஏ’ குழுமம்

படம்: சாவ்பாவ்

11 Nov 2026 - 8:30 pm

2 mins read

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் 2026/2027 நிதியாண்டின் முற்பாதியில் சாதனை அளவாக $11.30 பில்லியன் வருவாயை ஈட்டியுள்ளது.

துடிப்புமிக்க பயணங்களின் தேவையால் ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் 16.8 விழுக்காட்டு வருவாயைக் குழுமம் ஈட்டியது.

இருப்பினும், மத்திய கிழக்குப் போரால் அதிகரித்துள்ள விமான எரிபொருள் விலையால் முதல் அரையாண்டின் லாபம் 43.9 விழுக்காடு சரிந்து $134 மில்லியன் ஆனது.

அரையாண்டில் லாபம் சுருங்கியபோதும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வாரியம், ஒரு பங்குக்கு 2 காசு இடைக்கால சாதாரண ஈவுத்தொகையையும் ஒரு பங்குக்கு 5 காசு இடைக்கால சிறப்பு ஈவுத்தொகையையும் அறிவித்தது.

அதன் மூலம், அரையாண்டுக்கான மொத்த ஈவுத்தொகை ஒரு பங்குக்கு 7 காசாக உயர்கிறது. அந்த ஈவுத்தொகைகள், பங்குதாரர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸும் ஸ்கூட்டும் இணைந்து சாதனை அளவாக 21.8 மில்லியன் பயணிகளைக் கையாண்டன. முந்தைய ஆண்டுடன் ஒப்புநோக்க அது 5 விழுக்காடு அதிகம்.

பயணிகளால் வந்த வருவாய் 16.8 விழுக்காடு அதிகரித்து $9.10 பில்லியனானது.

சரக்கு நடவடிக்கைகளும் கணிசமான ஆதாயங்களை ஈட்டின. சரக்கு வருவாய் 25.4 விழுக்காடு உயர்ந்ததாலும் சரக்கு ஏற்றுக் காரணி, 2.0 விழுக்காட்டு அதிகரித்து 58.5 விழுக்காடாக உயர்ந்ததாலும் சரக்கு வருவாய் 30.2 விழுக்காடு அதிகரித்து $1.39 பில்லியனாகப் பதிவானது.

கடல்சார் இடையூறுகளுக்கு இடையில், கடலிலிருந்து விமானத்திற்கு மாறிய சரக்கின் அளவுகளாலும் குறைக்கடத்தி, கிளவுட் கம்ப்யூட்டிங் உபகரணங்களின் நிலையான அளவுகளாலும் சரக்குப் பிரிவு பயனடைந்தது.

எரிபொருள் விலை உயர்வால் வருவாய் குறைந்தது. குழுமத்தின் மொத்த செலவினம் 20.9 விழுக்காடு அதிகரித்து $10.73 பில்லியனாக உயர்ந்தது. அது மொத்த வருவாய் ஆதாயங்களை ஈடுசெய்தது.

குறிப்புச் சொற்கள்